August 4, 2020
B4blaze Tamil
News

அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி

அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் விஜய்(வயது 26). இவர், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை இவர்களுக்கு சொந்தமான செங்கல் சூளை அடுப்புகளில் விறகுகள் வைத்து எரிக்கும் பணியை ஆட்கள் செய்து கொண்டு இருந்தனர். விஜய்யும் அவர்களுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது விறகுகளை அடுப்பில் தள்ளும் நீளமான இரும்பு கம்பியை விஜய் எடுத்து சென்றார். அந்த கம்பி எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பி மீது உரசியது. இதில் கம்பி வழியாக விஜய் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவரை சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

சுப நிகழ்ச்சிகள் இல்லாததால் வாழைத்தார்கள் விலை குறைவு !!

webadmin

முக்கிய பகுதியில் நடைபெறும் போராட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பு

webadmin

வேலாயுதம்பாளையம் அருகே 2 வயது குழந்தை கடத்தல்- போலீசார் விசாரணை

webadmin

மாணவர்கள் போராட்டம் பற்றி ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சர்ச்சை கருத்து – சின்மயி கண்டனம்

webadmin

சர்வதேச தாய்மொழி தினம் இன்று

webadmin

காவல்துறையினரின் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர்

webadmin

முக்கிய மாகாணத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நாளை முதல் வழங்கப்படும் உணவுப்பொருட்கள்

webadmin

மோடி குறித்த அவதூறு : பத்திரிக்கையாளர் மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு உத்தரவு

webadmin

பெரியார் பற்றி பேசிய ரஜினி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

webadmin

தனுஷின் பாலிவுட் படத்தில் இணையும் முன்னணி நடிகர்

webadmin

புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய பா.இரஞ்சித்- வெளியான தகவல்

webadmin

கிரீன் வைட்டமின் ஜூஸ் செய்வது எப்படி?

webadmin