Connect with us

News

ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

Published

on

வாழைப்பந்தல்:

ஆற்காடு அடுத்த வாழப்பந்தல் மேல் புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மங்கையர்க்கரசி (வயது 33). தம்பதிக்கு காவியா (10), சந்தியா (7), சோனியா (3) என்ற பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது வீட்டு மொட்டை மாடியில் உள்ள இணைப்பு கம்பியில் துணி காயப்போடுவதற்காக இரும்பு கம்பி கட்டி வைத்துள்ளனர். நேற்று மாலை மங்கையர்கரசி மாடிக்கு சென்று கம்பியில் துணிகளை காயப்போட்டார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வாழைப்பந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News

ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளனர்: ட்ரம்ப்

Published

on

சிரியா -துருக்கி எல்லையில் உள்ள குர்து படையினர் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Continue Reading

News

சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு : விவரங்கள் குறித்து விசாரணை

Published

on

ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் தங்கமணி (70) என்பவர் உடல் நலக்குறைவால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் மட்டும் தெரிய வந்துள்ள நிலையில், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற மற்ற விவரங்கள் தெரியவில்லை. அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

News

பாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்

Published

on




பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளான மால்கண்ட், மர்டன் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 


Continue Reading

Updates

Trending