September 18, 2020
B4blaze Tamil
News

ஆலங்குளம் காட்டுப்பகுதியில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை

ஆலங்குளம்:

ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கில் இருந்து புதுப்பட்டி செல்லும் சாலையில் தனியார் ரைஸ்மில் ஒன்று உள்ளது. இதன் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு உள்ள இரும்பு வேலி அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அவர் அரைநிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆலங்குளம் வி.ஏ.ஓ. ரமேஷ் மற்றும் தலையாரி முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் 3 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடல் புழு அரித்த நிலையில் உள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே மதுபானக்கடை உள்ளது. இதனால் அவர் மது குடித்துவிட்டு மது போதையில் இரும்பு வேலியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது நண்பர்களுடன் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இந்திய அணி ஏமாற்றம் – தின செய்திகள்

webadmin

மதிப்பெண் குறைவாக வாங்கியதால் 9-ம் வகுப்பு மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலை

webadmin

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகிறது.

webadmin

நிர்வாண வீடியோ எடுத்து தொழிலதிபரை மிரட்டிய மூவர் கைது

webadmin

அமெரிக்காவில் பேருந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர் கைது

webadmin

பலத்த மழை மற்றும் வெள்ள அபாயம், சிவப்பு எச்சரிக்கை

webadmin

‘ஏ’ டிவிசன் லீக் ஹாக்கி போட்டியில் ஸ்டேட் வங்கி அணி வெற்றி !!

webadmin

நகரி அருகே செம்மரம் கடத்திய ராணுவவீரர் உள்பட 5 பேர் கைது – போலீசார் விசாரணை !!

webadmin

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் தெரியுமா?

webadmin

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி – தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு

webadmin

அண்ணாசாலையில் மாணவியை ஆசீர்வதிப்பது போல நடித்து ரூ.5 ஆயிரம் பறித்த திருநங்கைகள்

webadmin

ஜம்மு-காஷ்மீரில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

webadmin