Connect with us

News

உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் தமிழகத்திற்கு நிதி உதவிகளை பெற ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை !!

Published

on




வாஷிங்டன் டிசியில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு தமிழகத்தில் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கான ஆலோசனைகளை நடத்தினார். சர்வதேச நிதி நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது.


News

பச்சிளம் குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்த மர்ம நபர்

Published

on

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடேரு வனப்பகுதியில் வசமாமிடி என்ற மலை கிராமத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் குழந்தை அழுகை சத்தம்  வந்துள்ளது. அந்த வழியே சென்ற ஒருவர் சத்தம் வந்த இடத்தில் மண் மூடப்பட்டிருந்தது. அதிர்ந்துபோன அந்த நபர், விரைந்து சென்று பார்த்தபோது, பச்சிளம் குழந்தை ஒன்றை மர்ம நபர் ஒருவர் உயிரோடு குழி தோண்டி புதைக்க முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது.  ஊர் மக்கள் அதை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணையைத் தொடக்கியுள்ளனர். மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டபோது, குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது.

Continue Reading

News

அந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே

Published

on




இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது.  இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.

 


Continue Reading

News

உடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்

Published

on




உப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.
உப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.
உடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.


Continue Reading

Updates

Trending