Connect with us

News

எங்கள் இறப்பிற்கு அப்பாதான் காரணம் – பெங்களூரைச் சேர்ந்த தாய், 2 மகள்கள் தற்கொலை

Published

on

பெங்களூரு:

பெங்களூரைச் சேர்ந்தவர் சித்தையா(48). இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் மானசா(17) பன்னிரெண்டாம் வகுப்பும், பூமிகா(15) பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

மானசா, நேற்று முந்தினம் வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்றை தனது மாமா புட்டசாமிக்கு அனுப்பியுள்ளார். இதில், ‘அனைவருக்கும் நல்ல அப்பா கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்திருந்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். எங்கள் இறப்பிற்கு அவர்தான் காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை படித்த அவர் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி வீட்டிற்கு கிளம்பினார்.

வீட்டில் 3 பேரும் தூக்கில் தொங்கி கிடந்ததை கண்டு அலறினார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இவர்கள் இறக்க காரணம் என்ன? என்பதை போலீசார் விசாரிக்கையில், சித்தையாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், இதனால் அவர் குடும்பத்தை கண்டுக் கொள்ளாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

News

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு

Published

on

புதுடெல்லி:

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Continue Reading

News

முதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published

on

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்பிகா. சமீப காலமாக கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று காலையும் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

அப்போது அம்பிகா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்த நேரத்தில் சங்கர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அம்பிகா கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Continue Reading

News

கண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்

Published

on
கண்ணூர்

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள குந்தரா போலீஸ் சரகம் அஞ்சுகுன்னுவை சேர்ந்தவர் ஷாஜிலா( வயது 40) . இவர் கடந்த புதன்கிழமை தனது இளைய மகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஷாஜிலாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனிஷ் குட்டி( வயது 32) என்பவர் ஷாஜிலாவை வழியில் மறித்து தகராறு செய்துள்ளார்.

பின்னர் அனிஷ்குட்டி ஷாஜிலாவை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ஷாஜிலா மார்பு, கைகள், கால்கள், வயிறு மற்றும் கழுத்து ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனிஷ்குட்டியை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ஷாஜிலாவுக்கும், அனிஷ் குட்டிக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஷாஜிலா சில நாட்களாக அனிஷ் குட்டியை கண்டுகொள்வது இல்லை. இதனால் கோபம் அடைந்த அனிஷ் குட்டி ஷாஜிலாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். ஷாஜிலாவுக்கு மார்பு, கைகள், கால்கள், வயிறு மற்றும் கழுத்து என பல இடங்களில் 31 கத்திக்குத்து காயங்கள் இருந்தன.


Continue Reading

Updates

Trending