B4blaze Tamil
News

கண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்




கண்ணூர்

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள குந்தரா போலீஸ் சரகம் அஞ்சுகுன்னுவை சேர்ந்தவர் ஷாஜிலா( வயது 40) . இவர் கடந்த புதன்கிழமை தனது இளைய மகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஷாஜிலாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனிஷ் குட்டி( வயது 32) என்பவர் ஷாஜிலாவை வழியில் மறித்து தகராறு செய்துள்ளார்.

பின்னர் அனிஷ்குட்டி ஷாஜிலாவை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ஷாஜிலா மார்பு, கைகள், கால்கள், வயிறு மற்றும் கழுத்து ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனிஷ்குட்டியை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ஷாஜிலாவுக்கும், அனிஷ் குட்டிக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஷாஜிலா சில நாட்களாக அனிஷ் குட்டியை கண்டுகொள்வது இல்லை. இதனால் கோபம் அடைந்த அனிஷ் குட்டி ஷாஜிலாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். ஷாஜிலாவுக்கு மார்பு, கைகள், கால்கள், வயிறு மற்றும் கழுத்து என பல இடங்களில் 31 கத்திக்குத்து காயங்கள் இருந்தன.


Related posts

தீராத நோயால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

webadmin

கொத்தமல்லி டீ

webadmin

அரூர் திங்கள் சந்தையில் சூடுபிடித்த கருவாடு விற்பனை !!

webadmin

மதுராந்தகம் அருகே தாமதமாக வந்த அரசு பஸ்சை மாணவர்கள் சிறைபிடித்து போராட்டம் !!

webadmin

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை

webadmin

நடிகை நயன்தாரா மீது அதிருப்தியில் தெலுங்கு ரசிகர்கள்! – காரணம் என்ன தெரியுமா?

webadmin

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறும் சித்த வைத்தியர்

webadmin

கோவை அருகே குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தற்கொலை !!

webadmin

சென்னையில் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன – மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்

webadmin

மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்

webadmin

மார்ச் 03 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

webadmin

பிப்ரவரி 14 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்- சத்யபிரதா சாஹு

webadmin