Connect with us

News

கள்ளநோட்டை மாற்ற முயன்ற அரசு ஊழியர் அதிரடி கைது

Published

on

மதுரை,

மதுரை ஆத்திக்குளம் கங்கை தெருவை சேர்ந்தவர் பிரசன்னா (27), அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றும் இவர், சம்பவத்தன்று நத்தம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் 50 ரூபாய் கள்ளநோட்டை முயன்றபோது அங்கிருந்தவர்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து வந்து பிரசன்னாவை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்து ரூ.100 கள்ளநோட்டுகள் 9, ரூ.50 கள்ளநோட்டு 1 ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்து, அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

News

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு

Published

on

புதுடெல்லி:

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Continue Reading

News

முதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published

on

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்பிகா. சமீப காலமாக கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று காலையும் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

அப்போது அம்பிகா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்த நேரத்தில் சங்கர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அம்பிகா கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Continue Reading

News

கண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்

Published

on




கண்ணூர்

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள குந்தரா போலீஸ் சரகம் அஞ்சுகுன்னுவை சேர்ந்தவர் ஷாஜிலா( வயது 40) . இவர் கடந்த புதன்கிழமை தனது இளைய மகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஷாஜிலாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனிஷ் குட்டி( வயது 32) என்பவர் ஷாஜிலாவை வழியில் மறித்து தகராறு செய்துள்ளார்.

பின்னர் அனிஷ்குட்டி ஷாஜிலாவை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ஷாஜிலா மார்பு, கைகள், கால்கள், வயிறு மற்றும் கழுத்து ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனிஷ்குட்டியை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ஷாஜிலாவுக்கும், அனிஷ் குட்டிக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஷாஜிலா சில நாட்களாக அனிஷ் குட்டியை கண்டுகொள்வது இல்லை. இதனால் கோபம் அடைந்த அனிஷ் குட்டி ஷாஜிலாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். ஷாஜிலாவுக்கு மார்பு, கைகள், கால்கள், வயிறு மற்றும் கழுத்து என பல இடங்களில் 31 கத்திக்குத்து காயங்கள் இருந்தன.


Continue Reading

Updates

Trending