Connect with us

News

காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கைதான ஆறு பேரிடமும் தொடர்ந்து விசாரணை

Published

on
இலங்கையில் அக்குரஸ்ஸ போலீசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் பாணந்துறை வடக்கு காவல் நிலையத்தில் இருந்து காணாமல்போன இரண்டு துப்பாக்கி விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரிடமும் 48 மணி நேர போலீஸ் தடுப்புக் காவலின் கீழ் விசாரணைகள் நடை பெற்று வருவதாக காவல்துறையின் உயர் அதிகாரி ருவான் குணசேகர கூறியுள்ளார் . அக்குரஸ்ஸ போலீஸ் உயர் அதிகாரி பிரேமலால் டி சில்வவாவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு ஏற்ப நேற்று முன்தினம் மாலை 4.00 மணியளவில் பரதுவ பகுதியில் வைத்து 16 வயதுடைய கூலி வேலை செய்யும் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவர், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவர் என காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்த நிலையில், மற்ற இருவர் தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மற்ற இருவர் தொடர்பாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவர் தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த 28 வயதான பாணந்துறை ராணுவ முகாமில் கடமையாற்றும் ராணுவ சிப்பாயும் மற்றொருவர் எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதான இன்னொருவரும் ஆவார்.


News

கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து மழையில் பிரதமர் மோடி

Published

on
டெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின்  69-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறன்றனர்

இதனைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், பிரதமர் மோடிக்கு தங்களது டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

எங்கள் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறோம்,” என்று கோலி தனது டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி  ஜிக்கு வாழ்த்துக்கள். ஆரோக்கியமான மற்றும் தூய்மையான இந்தியாவுக்கான உங்கள் பார்வை அனைவருக்கும் ஒரு உத்வேகம். நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், என்று சச்சின் பதிவிட்டுள்ளார்.

இவர்களை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியா , குருணால் பாண்டியா, கேதர் ஜாதவ், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் தங்களது டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Continue Reading

News

வாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்

Published

on

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய திருமணமான இளம்பெண் ஒருவர், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நெகிழி குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ் (வயது 25) என்ற இளைஞரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், தினேசை மிரட்டி, அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அவருடன் வந்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். தினேசை அடிக்காதீர்கள், விட்டு விடுங்கள் என அவர்களிடம் கெஞ்சினார்.

ஆனால் மீண்டும் தினேசை அடித்து உதைத்து விட்டு அவர்கள், இளம்பெண்ணை வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் பதறிப்போன தினேஷ், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூறி பொதுமக்களை அழைத்து வந்து கூச்சலிட்டதால், இளம்பெண்னை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு, அங்கிருந்து 6 பேரும் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீர் மல்க ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது பற்றி உயர் அதிகாரிகளான போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் வாழப்பாடி டி.எஸ்.பி. சூரிய மூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நெய்யமலை பகுதி மக்கள் கூறிய தகவல்களை வைத்தும், பாதிக்கப்பட்ட பெண் கூறிய அங்க, அடையாளங்களை வைத்தும், அந்த பகுதியில் பதுங்கியிருந்த 4 பேரை செய்தனர். இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

News

அங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Published

on
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் 1512 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கைபேசியினை கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், அமைச்சர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இதன்மூலம் அங்கன்வாடி மைய பணிகளுக்கான நிகழ்நேர கண்காணிப்பிற்கும், சரியான முறையில் தகவலை பெற ஏதுவாக இருக்கும் மேலும், பயனாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு சரியான நேரத்தில் திட்ட உதவிகளை வழங்குவதற்கும், பயனாளிகளின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.


Continue Reading

Updates

Trending