Home News கூலி தொழிலாளியை சரமாரியாக தாக்கிய மூன்று பேர் கைது

கூலி தொழிலாளியை சரமாரியாக தாக்கிய மூன்று பேர் கைது

இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது . கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 30). இவர் அதேஊரை சேர்ந்த தனது உறவினரான கிருஷ்ணன் (45) என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 20 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அப்படியிருக்க அந்த பணத்தை கிருஷ்ணன் திருப்பி கேட்டுள்ளார். இப்போது பணம் இல்லை. விரைவில் கொடுக்கிறேன் என சிவராஜ் சொல்லியிருக்கிறார் . இதனால் இருவருக்குமிடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களான அருணாச்சலம்(55), லட்சுமணன்(42) ஆகியோர் சிவராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிவராஜ் ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார் . இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, சிவராஜை தாக்கிய கிருஷ்ணன், அருணாச்சலம், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

Most Popular

கொரோனா முன்னெச்சரிக்கை – சென்னை புதுப்பேட்டையில் அனைத்து தெருக்களும் மூடல்

சென்னை: சென்னை புதுப்பேட்டையில் உள்ள 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து புதுப்பேட்டையின் அனைத்து தெருக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. புதுப்பேட்டைக்குள் நுழையும் அனைத்து பாதைகளிலும் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். பொதுமக்கள்...

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்...

கங்குலி – டோனி கேப்டன்ஷிப்பில் சிறந்தவர் யார்? யுவராஜ்சிங் அதிரடி கருத்து

கேப்டன்ஷிப்பில் கங்குலி, டோனி ஆகியோரில் யார் சிறந்தவர் என்று பிரித்து பார்ப்பது கடினம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘நான் சவுரவ் கங்குலி...

அதிகமாக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறையும்

* உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 18 வயது முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ அல்லது அதற்கு...

Recent Comments