Connect with us

News

கொத்தடிமைகளாக இருந்து மீட்க்கப்பட்டவா்களுக்கு மறுவாழ்வு குறித்து திமுக சார்பில் கோரிக்கை மனு

Published

on
சென்னை,

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நலன் கருதி, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிறவற்றை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கொத்தடிமைகளாக இருந்த 15 பேர்களை, விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மறுவாழ்வு நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்களும், சர்வதேச நீதி இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வி.சாம் ஜெபதுரை மற்றும் இயக்குநர் மெர்லின் பிரீடா ஆகியோர் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்கள் சுயமாக தொழில் செய்ய வழிவகை செய்து வருகின்றனர்.

அவ்வாறு கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து மீண்டு, சுயமாக தொழில் நடத்தி வருபவர்கள், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினரான டாக்டர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி. தலைமையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து, தங்கள் சுயதொழிலில் செய்த பொருட்களை பரிசாக அளித்து வாழ்த்து பெற்றனர்.

கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்படும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் கருதி, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்தும் ஒருமுனைத் திட்டத்தின் கீழ் வழங்கிட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனுவையும் அளித்தனர். அப்போது, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.


News

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

Published

on

தேவையானவை:
சிக்கன் – அரை கிலோ
சீரக சம்பா அரிசி – அரை கிலோ
பச்சை மிளகாய் – 10
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா – ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு
பால் – கால் லிட்டர்
தயிர் – 100 மில்லி
எண்ணெய் – 50 மில்லி
நெய் – 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்  – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை: சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும். புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும். அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி – பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து குழைய வேக விடவும். தக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும். அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும். சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி.

Continue Reading

News

‘தால்’ எரிமலை எந்நேரத்திலும் வெடிக்கும் அபாயம் – தின செய்திகள்

Published

on

பிலிப்பீன்ஸின் பட்டாங்கஸ்   மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் “தால்” எரிமலை எந்நேரத்திலும் வெடிக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். எரிமலை குறைவான அதிர்வுகளையும் பலவீனமான உமிழ்வுகளையும் கொண்டிருந்தபோதும் மக்களின் அச்சம் நீங்கவில்லை. எனினும்  அபாயமிக்க வட்டாரத்திற்குள் வாழ்ந்த மக்கள் மீண்டும் அவர்களின் இல்லங்களுக்குத் திரும்ப தற்காலிகமாய் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிமலையின் சீற்றம் குறைந்திருப்பதே அதற்கு காரணம்.  கடந்த வாரம் தால் எரிமலை வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். எரிமலை சாம்பலையும் வெப்பக் குழம்பையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றியதைத் தொடர்ந்து  66,000க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். வரும் நாள்களில் ‘தால்’ எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Continue Reading

News

ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஒருநாள் போட்டி நாளை தொடக்கம் – தின செய்திகள்

Published

on
பெங்களூர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது போட்டியில், நடந்த 2-வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால்  தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.  இந்நிலையில், இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை  (19-ந்தேதி) நடக்கிறது.

விராட் கோலி தலைமை யிலான அணி ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன்  எதிர்பார்க்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்ததற்கு பதிலடி கொடுத்து  தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியா பலம் வாய்ந்ததாக திகழ்வதால் அந்த  அணியை தோற்கடிக்க இந்தியா கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.  இரவில் பனித்துளி அதிகமாக இருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி ‘சேசிங்’ செய்யவே  விரும்பும்.

கடந்த 2 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தான் டாஸ் வென்றது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி எளிதாக இலக்கை  எட்டியது. 2-வது போட்டியில் 341 ரன் இலக்கை நெருங்கி வந்து தோற்றது. பனித்துளியால் ஈரப்பதம் இருக்கும் என்பதால் 2-வதாக பந்து  வீசுவது சவாலானது. தொடரை வெல்ல இரு அணிகளும் போராடும் என்பதால், இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Continue Reading

Updates

Trending