Connect with us

News

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் மரணத்தில் இருக்கும் அதிர்ச்சி பின்னணி

Published

on

பிரபல இயக்குனரும் சீரியல் நடிகருமான ராஜசேகர் சில தினங்களுக்கு முன்பு காலமானார். இவர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சரியான சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் அவதி பட்டுள்ளனர். அவர் நடித்த சீரியலின் இயக்குனர் ஒருவர் கொஞ்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். அந்த பணமும் சிகிச்சைக்கு போதவில்லை. இந்த நிலையில் தான் ராஜசேகர் உயிரிழந்துள்ளார்.

News

‘தால்’ எரிமலை எந்நேரத்திலும் வெடிக்கும் அபாயம் – தின செய்திகள்

Published

on

பிலிப்பீன்ஸின் பட்டாங்கஸ்   மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் “தால்” எரிமலை எந்நேரத்திலும் வெடிக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். எரிமலை குறைவான அதிர்வுகளையும் பலவீனமான உமிழ்வுகளையும் கொண்டிருந்தபோதும் மக்களின் அச்சம் நீங்கவில்லை. எனினும்  அபாயமிக்க வட்டாரத்திற்குள் வாழ்ந்த மக்கள் மீண்டும் அவர்களின் இல்லங்களுக்குத் திரும்ப தற்காலிகமாய் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிமலையின் சீற்றம் குறைந்திருப்பதே அதற்கு காரணம்.  கடந்த வாரம் தால் எரிமலை வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். எரிமலை சாம்பலையும் வெப்பக் குழம்பையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றியதைத் தொடர்ந்து  66,000க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். வரும் நாள்களில் ‘தால்’ எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Continue Reading

News

ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஒருநாள் போட்டி நாளை தொடக்கம் – தின செய்திகள்

Published

on




பெங்களூர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது போட்டியில், நடந்த 2-வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால்  தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.  இந்நிலையில், இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை  (19-ந்தேதி) நடக்கிறது.

விராட் கோலி தலைமை யிலான அணி ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன்  எதிர்பார்க்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்ததற்கு பதிலடி கொடுத்து  தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியா பலம் வாய்ந்ததாக திகழ்வதால் அந்த  அணியை தோற்கடிக்க இந்தியா கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.  இரவில் பனித்துளி அதிகமாக இருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி ‘சேசிங்’ செய்யவே  விரும்பும்.

கடந்த 2 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தான் டாஸ் வென்றது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி எளிதாக இலக்கை  எட்டியது. 2-வது போட்டியில் 341 ரன் இலக்கை நெருங்கி வந்து தோற்றது. பனித்துளியால் ஈரப்பதம் இருக்கும் என்பதால் 2-வதாக பந்து  வீசுவது சவாலானது. தொடரை வெல்ல இரு அணிகளும் போராடும் என்பதால், இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Continue Reading

News

காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை : பெற்றோர்கள் எதிர்த்ததால் பரிதாபம்

Published

on

ஆரணி

ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த குந்தவாழுரை சேர்ந்தவர் தேவராஜ் (22), கார் டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (19) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெங்களூரில் தங்கியிருந்து தேவராஜ் கார் ஓட்டி வந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கருங்காலி குப்பம் சமத்துவபுரத்தில் வசித்து வரும் தேவராஜின் சித்தி சந்திரா வீட்டிற்கு இருவரும் வந்தனர்.

காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த காதல் தம்பதியினர் நேற்று இரவு சந்திராவின் வீட்டு முன்பு புங்கமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தேவராஜிம், காயத்ரியும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு சந்திரா அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து களம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

Updates

Trending