Connect with us

News

சீனி அவரைக்காய் பொரியல் – தின செய்திகள்

Published

on




 தேவையானவை:

செய்முறை:

முதலில் குக்கரில் சீனி அவரைக்காயை போட்டு லேசாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் வதங்கியதும் வெந்த சீனி அவரைக்காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து பிரட்டவும். இவற்றுடன் புளிக் கரைசலை ஊற்றி காய் நன்றாக வதங்கியதும் இறக்கவும்.


News

சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு : விவரங்கள் குறித்து விசாரணை

Published

on

ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் தங்கமணி (70) என்பவர் உடல் நலக்குறைவால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் மட்டும் தெரிய வந்துள்ள நிலையில், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற மற்ற விவரங்கள் தெரியவில்லை. அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

News

பாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்

Published

on




பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளான மால்கண்ட், மர்டன் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 


Continue Reading

News

சாம்பார் பொடி – தின செய்திகள்

Published

on




தேவையான பொருள்கள்
மிளகாய் வத்தல் – 1/4 கிலோ
கொத்தமல்லி – 300 கிராம்
சீரகம் – 100 கிராம்
துவரம் பருப்பு – 50கிராம்
கடலைப் பருப்பு – 50 கிராம்
மிளகு – 25 கிராம்
வெந்தயம் – 25 கிராம்

செய்முறை
முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும். வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மெசினில் கொடுத்து அரைக்கவும். இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம். காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.


Continue Reading

Updates

Trending