Connect with us

News

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு !!

Published

on




பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் கடந்த 1 வாரமாக தங்கம் விலையில் சிறிது சிறிதாக சரிந்து, நேற்று தங்கம் விலைபவுன் ரூ.29,192-க்கும் விற்பனையானது. இன்று தங்கம் விலை மேலும் குறைந்து 1 பவுனுக்கு ரூ.29,072-க்கு விற்பனையானது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.51,200-க்கு விற்பனையானது.


News

வாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்

Published

on

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய திருமணமான இளம்பெண் ஒருவர், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நெகிழி குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ் (வயது 25) என்ற இளைஞரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், தினேசை மிரட்டி, அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அவருடன் வந்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். தினேசை அடிக்காதீர்கள், விட்டு விடுங்கள் என அவர்களிடம் கெஞ்சினார்.

ஆனால் மீண்டும் தினேசை அடித்து உதைத்து விட்டு அவர்கள், இளம்பெண்ணை வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் பதறிப்போன தினேஷ், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூறி பொதுமக்களை அழைத்து வந்து கூச்சலிட்டதால், இளம்பெண்னை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு, அங்கிருந்து 6 பேரும் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீர் மல்க ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது பற்றி உயர் அதிகாரிகளான போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் வாழப்பாடி டி.எஸ்.பி. சூரிய மூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நெய்யமலை பகுதி மக்கள் கூறிய தகவல்களை வைத்தும், பாதிக்கப்பட்ட பெண் கூறிய அங்க, அடையாளங்களை வைத்தும், அந்த பகுதியில் பதுங்கியிருந்த 4 பேரை செய்தனர். இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

News

அங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Published

on




திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் 1512 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கைபேசியினை கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், அமைச்சர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இதன்மூலம் அங்கன்வாடி மைய பணிகளுக்கான நிகழ்நேர கண்காணிப்பிற்கும், சரியான முறையில் தகவலை பெற ஏதுவாக இருக்கும் மேலும், பயனாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு சரியான நேரத்தில் திட்ட உதவிகளை வழங்குவதற்கும், பயனாளிகளின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.


Continue Reading

News

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

Published

on

நாகப்பட்டினம்:

திருவாரூர் மாவட்டம் வேலங்குடி கீழப்படுகை மெயின் சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 25). ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் யாஸ்மின் (19). காதல் திருமணம் செய்த இவர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் பாஸ்கரன் கூறியிருப்பதாவது, நான் திருவாரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தொழில் சம்பந்தமாக ஈரோடு செல்லும் போது யாஸ்மினுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 12-ம் தேதி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். எங்களை குடும்பத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.

Continue Reading

Updates

Trending