Connect with us

News

சென்னை எழும்பூரில் கஞ்சா கடத்திய 3 பெண்கள் கைது

Published

on

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது எழும்பூர் ரெயில் நிலையத்தின், பின்புறத்தில் பையுடன் 4 பேர் சுற்றித்திரிவதை பார்த்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அதில் அந்த 4 பேரின் பைக்குள் 23 பொட்டலங்களாக, 46 கிலோ கஞ்சா இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்த 4 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (42), சசிகலா (38), பாண்டீஸ்வரி (35), திருச்சியைச் சேர்ந்த பாத்திமா சலீம் (66) என்பதும், இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா கடத்தி வந்த 4 பேரையும் கைது செய்தனர்.

News

உடலுக்கு குளிர்ச்சியை தரும் மருதம் பட்டை

Published

on




மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இந்த மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது.வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது.மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம்.மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.


Continue Reading

News

லிச்சி தரும் நன்மைகள் – தின செய்திகள்

Published

on




லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு. லிச்சிப் பழம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும். எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.


Continue Reading

News

புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் கொய்யா பழம்

Published

on




கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. மேலும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது. கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.

கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது. கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.


Continue Reading

Updates

Trending