Connect with us

News

சேத்துப்பட்டு அருகே தொழிலாளி அடித்து கொலை- போலீசார் விசாரணை

Published

on




ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருமலை என்கிற சின்ன பையன் (வயது35). கூலித் தொழிலாளி. திருமலை நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது அரசு பள்ளி அருகே உள்ள திரவுபதி அம்மன் கோயில் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் திருமலை குடும்பத்தாருக்கும் அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னதுரை அவரது அண்ணன் சேட்டு ஆகியோர் குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமலை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சின்னத்துரை, சேட்டு, சேட்டுவின் மனைவி அஞ்சலி ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


News

நடிகை தீப்தி சதியின் டூ பீஸ் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published

on

தென்னிந்திய திரையுலகில் மலையாள சினிமாவில், நீனா ,புள்ளிக்காரன் ஸ்தாரா ,சோலோ , லவ குசா ,டிரைவிங் லைசென்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை தீப்தி சதி . இவருக்கு சில திரைப்பட விருதுகள் கிடைத்திருக்கின்றன . இவரது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது .

Continue Reading

News

பெண் உயிரோடு எரித்து கொலை: பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

Published

on

பிஜோனூர்

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். யாரோ மர்ம மனிதர்கள் அந்த பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்களும் கிடந்தன. இதனால் அவரை சுட்டுக்கொன்று எரித்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்றும் தெரியவில்லை.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Continue Reading

News

சீரியல் நடிகை கவிதா வெளியிட்ட புதிய புகைப்படங்கள்

Published

on




சின்னத்திரை உலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் கவிதா . இவர் உதவும் கரங்கள், அசுரன்(1995), போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது புதிய புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.


Continue Reading

Updates

Trending