Connect with us

News

சேலத்தில் இரும்பு உருக்காலையை காமராஜர் கொண்டுவந்த வரலாறு இதுதான்!

Published

on
சென்னை:

சேலத்தில் இரும்பு உருக்காலையை உருவாக்க முன்னாள் முதல்வர் காமராஜர் எப்படி போராடினார் என்பதை விவரிக்கிறார் திமுகவின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

சேலத்திலுள்ள கஞ்சமலை வடக்குப் படுகை இரும்புத்தாது சுரங்கத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலைக்குக் கொடுக்காமல், தனியார் நிறுவனமான ஜிண்டலுக்குத் தமிழக அரசு நியாயங்களைப் புறக்கணித்துவிட்டு உரிமம் வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் சேலம் இரும்பாலை அமைந்தது. சேலம் இரும்பாலைக்கும், சேதுக் கால்வாய்க்கும், தூத்துக்குடி துறைமுகத்துக்கும் பேரறிஞர் அண்ணா எழுச்சி நாள் என்று அறிவித்தார். அன்று தமிழகம் முழுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த சேலம் இரும்பாலை எப்படி தமிழகத்துக்கு வந்தது என்பது தமிழகத்தின் சரித்திரத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று.

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது இதுகுறித்த முயற்சிகளை மேற்கொண்டார். ‘காமராஜ் பிளான்’ என்று முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிய அவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். அன்றைய பிரதமரான லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் நீலம் சஞ்சீவ ரெட்டி மத்திய அரசில் உருக்குத் தொழில் அமைச்சராக இருந்தார். தன்னுடைய மாநிலமான ஆந்திரத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் இந்த இரும்பாலையை அமைக்க விடாப்பிடியாக முயன்றார் அவர்.

காமராஜ், அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தியிடம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பிரதமர் சாஸ்திரியை சந்தித்து சேலத்துக்கு இரும்பாலை வேண்டும் என்று வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார். சாஸ்திரியைச் சந்தித்து இதுகுறித்து தமிழக அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டனர். அதன்பின்பு காமராஜ் அவசியம் இரும்பாலை சேலத்துக்கு வேண்டும் என்று சாஸ்திரியிடம் கேட்டுக்கொண்டார். அதன் காரணமாகத்தான் சேலத்தில் இந்த இரும்பாலை அமைந்தது.

முதல்வராக கருணாநிதி இருந்த போது பிரதமர் இந்திரா காந்தி 1970 செப்டம்பர் 16 அன்று சேலம் இரும்பு உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார்.சேலம் இரும்பாலையின் ரிஷிமூலம், நதிமூலம் என்று ஆராய்ந்தால் பல செய்திகள் உள்ளன.


News

ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளனர்: ட்ரம்ப்

Published

on

சிரியா -துருக்கி எல்லையில் உள்ள குர்து படையினர் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Continue Reading

News

சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு : விவரங்கள் குறித்து விசாரணை

Published

on

ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் தங்கமணி (70) என்பவர் உடல் நலக்குறைவால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் மட்டும் தெரிய வந்துள்ள நிலையில், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற மற்ற விவரங்கள் தெரியவில்லை. அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

News

பாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்

Published

on
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளான மால்கண்ட், மர்டன் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 


Continue Reading

Updates

Trending