கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. நினைவிட திறப்புவிழா விரைவில் நடக்கவிருக்கும் நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பகல் 12 மணி அளவில், ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேரில் சென்றார். நினைவிடம் அருகில் கட்டப்பட்டுள்ள கட்டுமானம், அறிவுசார் பூங்கா, பீனிக்ஸ் பறவையின் அமைப்பு உள்ளிட்ட அனைத்தையும் சுற்றி பார்வையிட்டார்.
previous post