Connect with us

News

தண்டராம்பட்டு அருகே லாரி டிரைவர் கொலை- போலீசார் விசாரணை

Published

on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது40). இவர் புதுச்சேரியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பானுபிரியா (32). இவர்களுக்கு சஞ்சய்(8) என்ற மகனும், தர்ஷினி(6) என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கடந்த ஒரு மாதமாக தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரிக்கு வேலைக்கு சென்ற வெங்கடேசன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

இன்று காலை அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் வெங்கடேசன் தலையில் காயம் இருந்தது. மர்ம நபர்கள், கல்லால் தாக்கி வெங்கடேசனை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசனின் மனைவி பானுபிரியா மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News

பாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்

Published

on
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளான மால்கண்ட், மர்டன் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 


Continue Reading

News

சாம்பார் பொடி – தின செய்திகள்

Published

on
தேவையான பொருள்கள்
மிளகாய் வத்தல் – 1/4 கிலோ
கொத்தமல்லி – 300 கிராம்
சீரகம் – 100 கிராம்
துவரம் பருப்பு – 50கிராம்
கடலைப் பருப்பு – 50 கிராம்
மிளகு – 25 கிராம்
வெந்தயம் – 25 கிராம்

செய்முறை
முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும். வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மெசினில் கொடுத்து அரைக்கவும். இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம். காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.


Continue Reading

News

இரு மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு – தின செய்திகள்

Published

on
புதுச்சேரியை அடுத்த நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமங்களுக்கிடையே கடந்த ஒரு மாத காலமாக சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் போலீசார் 2 பேரை கைது செய்தனர். இதன் காரணமாக இருக்கிராமகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இன்று இரு மீனவ கிராம்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது. கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, வலை போடுவதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இரு கிராம மீனவர்களும் கடற்கரையிலும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தியாக கூறப்படுகிறது.

இதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த நிலையில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய இரு மீனவ கிராமங்களிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.


Continue Reading

Updates

Trending