Connect with us

News

தனது அனுபவங்களை ‘‘ஃபில்லிங் கேப்’’ என்ற புத்தகமாக எழுதிய முன்னாள் கிரிக்கெட் நடுவர்!

Published

on




ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் சிமோன் டஃபேல்(48) தனது வாழ்க்கை அனுபவங்களை தொகுத்து, ‘‘ஃபில்லிங் கேப்’’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதற்கான விற்பனை விழா சென்னையில் உள்ள தனியார் சந்தை மாளிகையில் நேற்று நடைபெற்றது. டஃபேல் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘ நடுவர் போன்ற பொறுப்பான பணி, மனநிறைவை மட்டுமல்ல ஏராளமான அனுபவங்களையும் தந்தது. விமர்சனங்களையும் எதிர்நோக்கினேன். சரியான முடிவுகளை எடுக்க வசதியாக, நல்ல தொழில்நுட்பங்களை கையாள நடுவர்களை ஊக்கவிக்க வேண்டும். நமது முயற்சிகள், அனுபவங்களுடன் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எப்போது சரியாக இருக்கும்.

வீரராக இருந்தாலும், யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாரை போன்றும் மாற முயற்சிக்காதீர்கள். ஆனால் அவர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு உங்கள் பாணியை கடைபிடியுங்கள். அப்படி சிறந்த வீரராக மட்டுமல்லாமல் தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள மற்ற வீரர்களுக்கு வீராட் கோலி சிறந்த உதாரணமாக திகழ்கிறார். பகல் இரவு போட்டியாக டெஸ்ட் போட்டிகளை நடத்துவது, வண்ணப் பந்துகளை பயன்படுத்துவதில் சவால்கள் இருக்கவே செய்யும். ஆனால் டெஸ்ட் போட்டிகளை, அதில் விளையாடும் வீரர்களை மக்களிடையே பிரபலபடுத்துவது அவசியம்’ என்றார்.


News

லிச்சி தரும் நன்மைகள் – தின செய்திகள்

Published

on




லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு. லிச்சிப் பழம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும். எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.


Continue Reading

News

புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் கொய்யா பழம்

Published

on




கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. மேலும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது. கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.

கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது. கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.


Continue Reading

News

அத்திப்பழம் தரும் நன்மைகள்

Published

on

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு

பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.

Continue Reading

Updates

Trending