B4blaze Tamil
News

தின செய்திகள்: அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர் : பக்தர்கள் கோவிந்தா… முழக்கம்




காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நிறைவு நாள் வரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அத்திவரதர்.

மேலும் அத்திவரதர் தரிசனத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்களும் வந்து அத்திவரதரை தரிசித்தனர். நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் பக்தர்கள் தரிசனம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அன்று இரவே கோவில் கிழக்கு ராஜ கோபுரம் மூடப்பட்டது.  இதைத்தொடர்ந்து, 48-ம் நாளான நேற்று வி.ஐ.பி. பக்தர்கள் உள்பட எவரும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை பட்டாச்சாரியார்கள் அத்திவரதருக்கு காவி மற்றும் ரோஜா நிற பட்டாடை அணிவித்து, பூஜை செய்தனர். இதையடுத்து ஆகம விதிப்படி, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.

இதனையடுத்து, நேற்று இரவு அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் சிலை சயனநிலையில் வைக்கப்பட்டது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் சிலை வைக்கப்பட்டது. முன்னதாக, நேற்று மாலை 4 மணி அளவில் அத்திவரருக்கு 48 வகையான நைவேத்தியங்களை பட்டாச்சாரியார்கள் படைத்து கற்பூர தீபாராதனை காட்டினார்கள்.

பிறகு அத்திவரதர் வெண் பட்டு அணிவித்து வெள்ளி அணிவிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் இருந்து கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் நேற்று நள்ளிரவு வைக்கப்பட்டார்.   அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரர், 40 ஆண்டுகளுக்கு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.


Related posts

கடல் அரிப்பினால் வாழ்வாதாரத்தை இழக்கும் முக்கிய பகுதி மீனவர்கள்.

webadmin

3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம் – தின செய்திகள்

webadmin

இந்தியக் கடற்படைக்காக ஜிசாட்-7ஆர் செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ

webadmin