B4blaze Tamil
News

தின செய்திகள்: இடஒதுக்கீடு அளவை அதிகரிக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ்




சென்னை,

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அதிக இடஒதுக்கீடு வழங்கும் 2-வது மாநிலம் என்ற பெருமையை சத்தீஷ்கர் பெற்றுள்ளது.சத்தீஷ்கர் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீட்டை அதிகரிக்க சட்ட ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எந்த எதிர்ப்பும் எழப்போவதில்லை.எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். தேவைப்பட்டால் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Related posts

இளநீர் ஆப்பம் செய்வது எப்படி ??

webadmin

தலைநகரின் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

webadmin

அஜித், சிவகார்த்திகேயன் படத்தில் இசையமைத்த இமானுக்கு கிடைத்த விருது !!

webadmin