B4blaze Tamil
News

தின செய்திகள்: ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும்: பால்விலை உயர்வு குறித்து ஸ்டாலின்




சென்னை,

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பால்விலை உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இந்த திட்டத்தால் பொது மக்கள் பெரும் பாதிப்பையும், சுமையையும் சந்திப்பார்கள் என தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில்,

பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை!  தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா?  கடமை தவறிய அதிமுக அரசு, சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.



Related posts

மளிகை கடைக்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் கொள்ளை; தடுக்க முயன்ற கடை ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு

webadmin

தின செய்திகள்: கோவிலில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் : நேபாளத்தில் பரபரப்பு

webadmin

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்

webadmin