B4blaze Tamil
News

தின செய்திகள்: டாஸ்மாக் ஊழியர் கொலை : குற்றவாளி பிடிக்க 3 தனிப்படை




கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக் கடையில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராஜா (43) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 14-ந் தேதி இரவு கடையை மூடும் நேரத்தில் மர்ம நபர்கள் கடைக்கு வந்து ராஜாவை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொலை தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார் (கிருஷ்ணகிரி தாலுகா), கணேஷ்குமார் (மகராஜகடை) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். டாஸ்மாக் ஊழியர் ராஜா கொலை தொடர்பாக குருபரப்பள்ளி சுற்று வட்டாரத்தை சேர்ந்த பழைய குற்றவாளிகள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related posts

அதிமுக பொதுக்குழு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

webadmin

ஐக்கிய அரபு அமீரகத்தில் மணலுக்குள் புதையுண்டு வரும் ஒரு கிராமம்

webadmin

நேத்திரப் பூண்டின் மருத்துவப் பயன்கள் – தின செய்திகள்

webadmin