Connect with us

News

தின செய்திகள்: தங்கத்தின் இறக்குமதி வரியை குறைப்பது சாத்தியமற்றது: நிர்மலா சீதாராமன்

Published

on




அமதாபாத்,

தொடர்ந்து உயர்நிலையில் உள்ள ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ.29 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தங்கத்துக்கான இறக்குமதி விலையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ள நிலையில், இறக்குமதி வரியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த, நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுமா? என கேள்வி கேட்க்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இறக்குமதி வரியை குறைக்க முடியாது என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நகை செய்தல் உள்ளிட்ட மதிப்பு கூட்டு நடவடிக்கைகளுக்காக தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை போல தங்கமும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. நாம் வாங்கும் ஒவ்வொரு தங்கமும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக செலவிடப்படும் அன்னிய செலவாணியின் அளவை நாம் பார்க்க வேண்டும். நான் அதை தள்ளு படி செய்ய முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.


News

வாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்

Published

on

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய திருமணமான இளம்பெண் ஒருவர், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நெகிழி குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ் (வயது 25) என்ற இளைஞரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், தினேசை மிரட்டி, அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அவருடன் வந்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். தினேசை அடிக்காதீர்கள், விட்டு விடுங்கள் என அவர்களிடம் கெஞ்சினார்.

ஆனால் மீண்டும் தினேசை அடித்து உதைத்து விட்டு அவர்கள், இளம்பெண்ணை வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் பதறிப்போன தினேஷ், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூறி பொதுமக்களை அழைத்து வந்து கூச்சலிட்டதால், இளம்பெண்னை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு, அங்கிருந்து 6 பேரும் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீர் மல்க ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது பற்றி உயர் அதிகாரிகளான போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் வாழப்பாடி டி.எஸ்.பி. சூரிய மூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நெய்யமலை பகுதி மக்கள் கூறிய தகவல்களை வைத்தும், பாதிக்கப்பட்ட பெண் கூறிய அங்க, அடையாளங்களை வைத்தும், அந்த பகுதியில் பதுங்கியிருந்த 4 பேரை செய்தனர். இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

News

அங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Published

on




திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் 1512 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கைபேசியினை கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், அமைச்சர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இதன்மூலம் அங்கன்வாடி மைய பணிகளுக்கான நிகழ்நேர கண்காணிப்பிற்கும், சரியான முறையில் தகவலை பெற ஏதுவாக இருக்கும் மேலும், பயனாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு சரியான நேரத்தில் திட்ட உதவிகளை வழங்குவதற்கும், பயனாளிகளின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.


Continue Reading

News

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

Published

on

நாகப்பட்டினம்:

திருவாரூர் மாவட்டம் வேலங்குடி கீழப்படுகை மெயின் சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 25). ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் யாஸ்மின் (19). காதல் திருமணம் செய்த இவர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் பாஸ்கரன் கூறியிருப்பதாவது, நான் திருவாரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தொழில் சம்பந்தமாக ஈரோடு செல்லும் போது யாஸ்மினுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 12-ம் தேதி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். எங்களை குடும்பத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.

Continue Reading

Updates

Trending