B4blaze Tamil
News

தின செய்திகள்: பேருந்து மோதி சிற்பி பலி : தஞ்சையில் பரிதாபம்




தஞ்சை

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த பாபுராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம்(33) சிற்பம் செய்யும் தொழில் செய்துவரும் இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக புதுச்சேரியில் இருந்து திருவையாறு நோக்கி சென்ற புதுச்சேரி பஸ் முருகானந்தம் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முருகானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டதால் பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


Related posts

வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்

webadmin

அசத்தலான சுவையில் மீல்மேக்கர் மன்சூரியன் எப்படி செய்யலாம்?

webadmin

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பின்னுக்கு இறங்கிய பில்கேட்ஸ்

webadmin