Connect with us

News

தின செய்திகள்: போலீஸ் விசாரணைக்கு சென்ற விவசாயி மாயம் : உறவினா்கள் போராட்டம்

Published

on
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள கோம்பையில் வசித்து வருபவர் மார்க் யாகப்பன் (28). விவசாய பணி செய்து வரும அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.வெள்ளோடு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா நடத்துவதற்கான கூட்டம் நடந்தது.

அப்போது மார்க்யாகப்பன் தகராறு செய்ததாக ஊர் நிர்வாகிகள் அம்பாத்துரை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மார்க் யாகப்பன் மற்றும் அவருடைய சித்தப்பா பீட்டர் ஆகியோரை போலீசார் அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 9-ந்தேதி முதல் 3 நாட்கள் ஆலய திருவிழா நடந்தது.

இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி அம்பாத்துர் போலீசார், ஊர் நிர்வாகிகள் புகார் செய்துள்ளதாக கூறி மார்க் யாகப்பனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரின் மனைவி மெர்சி, தாய் மங்களம், தம்பி ஸ்டாலின் ஆகியோர் மார்க்யாகப்பன் மீன் விற்பனை செய்த இடத்தில் கிடந்த அழுகிய மீன்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட 3 பேரையும் போலீஸ் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அனுமதியின்றி பொது இடத்தில் தர்ணாவில் ஈடுபட கூடாது என 3 பேரையும் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


News

புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் கொய்யா பழம்

Published

on
கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. மேலும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது. கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.

கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது. கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.


Continue Reading

News

அத்திப்பழம் தரும் நன்மைகள்

Published

on

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு

பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.

Continue Reading

News

நவம்பர் 14 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

Published

on

1682 – ரைக்லாவ் வொன் கூன்சு, ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதி ஆளுநர் (பி. 1619)

1916 – சாகி, பிரித்தானிய சிறுகதை எழுத்தாளர் (பி. 1870)

1920 – சுபோத் சந்திர மல்லிக், இந்தியத் தொழிலதிபர், பல்லூடகவாதி (பி. 1879)

1716 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646)

1831 – எகல், செருமானிய மெய்யியலாளர் (பி. 1770)

1916 – சாகி, பிரித்தானிய சிறுகதை எழுத்தாளர் (பி. 1870)

1938 – ஆன்சு கிறிட்டியன் கிராம், தென்மார்க்கு நுண்ணுயிரியியலாளர் (பி. 1853)

1938 – மகாத்மா அன்சுராசு, ஆரிய சமாசத் தலைவர், கல்வியாளர் (பி. 1864)

1977 – பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, கிருஷ்ண பக்திக் கழக நிறுவனர் (பி. 1896)

1987 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல்வாதி (பி. 1933)

2013 – ஓம் முத்துமாரி, தமிழகக் கிராமியக் கூத்துக்கலைஞர்

2015 – கே. எஸ். கோபாலகிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1929)

Continue Reading

Updates

Trending