Connect with us

News

தின செய்திகள்: மனைவியின் தகாத உறவு : தற்கொலைக்கு முயன்ற கணவன்

Published

on
நாகர்கோவில்,

நாகர்கோவில் மேலபுத்தேரி ஆணை பொத்தையை சேர்ந்தவர் மாரிமுத்து, என்பவர் நேற்று காலையில் தன் மகள் மற்றும் தாயாருடன் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார்  மாரிமுத்துவை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மாரிமுத்துவிடம் விசாரித்தபோது, என் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இதுபற்றி நான் ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் 2 பேர் என்னை அழைத்து மனைவி விஷயத்தில் தலையிட கூடாது என்று கூறி 2 பேரும் சேர்ந்து என்னை தாக்கினார்கள். இதனால் செய்வதறியாது நான் 2 நாட்கள் வீட்டுக்கு செல்லாமல் லாட்ஜில் தங்கி இருந்தேன்.

என் மனைவி மற்றும் அவருடன் தகாத உறவில் ஈடுபட்டு உள்ள நபர் மூலமாக எனக்கும், என் மகள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். இதன் காரணமாக தான் என்ன செய்வது என்று தெரியாமல் தீக்குளிக்க முயற்சி செய்தேன். எனவே என்னையும், என் மகளையும் காப்பாற்ற வேண்டும். என கூறியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனுவும் அளித்தார். பின்னர் மாரிமுத்துவை வடசேரி போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். அதன்பிறகு பரபரப்பு முடிவுக்கு வந்தது.


News

நெல்லை மாவட்டத்தை பிரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு

Published

on

நெல்லை,

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நெல்லை ஆட்சியர்  அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்தியகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காலை 10 மணி முதல் 11 மணி வரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான மக்கள் நெல்லை மாவட்டத்தை பிரிப்பதை வரவேற்கவில்லை. அம்பை, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களை தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Continue Reading

News

தின செய்திகள்: தங்கத்தின் இறக்குமதி வரியை குறைப்பது சாத்தியமற்றது: நிர்மலா சீதாராமன்

Published

on
அமதாபாத்,

தொடர்ந்து உயர்நிலையில் உள்ள ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ.29 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தங்கத்துக்கான இறக்குமதி விலையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ள நிலையில், இறக்குமதி வரியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த, நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுமா? என கேள்வி கேட்க்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இறக்குமதி வரியை குறைக்க முடியாது என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நகை செய்தல் உள்ளிட்ட மதிப்பு கூட்டு நடவடிக்கைகளுக்காக தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை போல தங்கமும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. நாம் வாங்கும் ஒவ்வொரு தங்கமும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக செலவிடப்படும் அன்னிய செலவாணியின் அளவை நாம் பார்க்க வேண்டும். நான் அதை தள்ளு படி செய்ய முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.


Continue Reading

News

காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பாகிஸ்தான் செய்த செயல்

Published

on

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 ரோடுகள் மற்றும் 5 பெரிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஷ்தார் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Updates

Trending