Connect with us

News

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்

Published

on

போர்ட் எலிசபேத்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 107 ரன் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து 189 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற சமநிலை இருக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் இன்று போர்ட் எலிசபெத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிராலி, சிப்லி ஆகியோர் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் சிப்லி 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிராலி 44 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஜோ டென்லி 25 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஆலி போப் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்,

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது, ஸ்டோக்ஸ் 38 ரன்னும், போப் 39 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 2 விக்கெட், நுர்ஜே, மகாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

News

ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஒருநாள் போட்டி நாளை தொடக்கம் – தின செய்திகள்

Published

on




பெங்களூர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது போட்டியில், நடந்த 2-வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால்  தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.  இந்நிலையில், இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை  (19-ந்தேதி) நடக்கிறது.

விராட் கோலி தலைமை யிலான அணி ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன்  எதிர்பார்க்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்ததற்கு பதிலடி கொடுத்து  தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியா பலம் வாய்ந்ததாக திகழ்வதால் அந்த  அணியை தோற்கடிக்க இந்தியா கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.  இரவில் பனித்துளி அதிகமாக இருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி ‘சேசிங்’ செய்யவே  விரும்பும்.

கடந்த 2 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தான் டாஸ் வென்றது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி எளிதாக இலக்கை  எட்டியது. 2-வது போட்டியில் 341 ரன் இலக்கை நெருங்கி வந்து தோற்றது. பனித்துளியால் ஈரப்பதம் இருக்கும் என்பதால் 2-வதாக பந்து  வீசுவது சவாலானது. தொடரை வெல்ல இரு அணிகளும் போராடும் என்பதால், இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Continue Reading

News

காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை : பெற்றோர்கள் எதிர்த்ததால் பரிதாபம்

Published

on

ஆரணி

ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த குந்தவாழுரை சேர்ந்தவர் தேவராஜ் (22), கார் டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (19) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெங்களூரில் தங்கியிருந்து தேவராஜ் கார் ஓட்டி வந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கருங்காலி குப்பம் சமத்துவபுரத்தில் வசித்து வரும் தேவராஜின் சித்தி சந்திரா வீட்டிற்கு இருவரும் வந்தனர்.

காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த காதல் தம்பதியினர் நேற்று இரவு சந்திராவின் வீட்டு முன்பு புங்கமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தேவராஜிம், காயத்ரியும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு சந்திரா அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து களம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

News

நடிகை தீப்தி சதியின் டூ பீஸ் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published

on

தென்னிந்திய திரையுலகில் மலையாள சினிமாவில், நீனா ,புள்ளிக்காரன் ஸ்தாரா ,சோலோ , லவ குசா ,டிரைவிங் லைசென்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை தீப்தி சதி . இவருக்கு சில திரைப்பட விருதுகள் கிடைத்திருக்கின்றன . இவரது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது .

Continue Reading

Updates

Trending