B4blaze Tamil
News

நள்ளிரவில் சிலிண்டர் கார் பயணம் : சிலிண்டர் வெடித்து கார் எரிந்து நாசம்

நாகர்கோவில்

நாகர்கோவில் அருகே உள்ள வல்லன்குமாரன் விளையைச் சேர்ந்தவர் சிவா (24). இவர் தனது நண்பர் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் (23) என்பவருடன் நேற்று நள்ளிரவு கியாஸ் மூலம் இயங்கும் ஆம்னி கார் ஒன்றில் மணக்குடியில் இருந்து மேலகிருஷ்ணன் புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது தெங்கம்புதூர் அருகே உள்ள மாலையணிந்தான் குடியிருப்பு பகுதியில் வந்தபோது திடீரென டயர் வெடித்ததால்நிலைதடுமாறியார் கார், நாலையோரம் நின்ற மின் கம்பத்தில் மோதி நின்றது. இதனால் காரில் இருந்த சிவா மற்றும் ஜோசப் ஆகியோர் காயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து சில நிமிடங்கள் இடைவெளியில் காரில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் கார் தீப்பற்றி எரிந்தது.

இதுபற்றி உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடாந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருந்தாலும் கார் தீப்பிடித்து முற்றிலும் சேதம் அடைந்தது.

அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 பேரும் வெளியே வந்த பிறகு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இல்லாவிட்டால் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும். காயம் அடைந்த 2 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related posts

பீர்க்கங்காய் மருத்துவ குணங்கள்

webadmin

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

webadmin

பிரபஞ்ச அழகியான சென்னை பெண் அக்‌ஷரா ரெட்டி – தின செய்திகள்

webadmin