Connect with us

News

நவராத்திரி நிறைவு விழா- ரஜினியை சந்தித்த ராகவா லாரன்ஸ்

Published

on




நடிப்பு, நடனம், இயக்கம், என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் ராகவ லாரன்ஸ். நடிப்பு மட்டுமின்றி, ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் செய்து வந்தார். இன்னலையில், நவராத்திரி நிறைவு நாளான நேற்று, சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் வீட்டிற்கு சென்று அவரிடமும் அவர மனைவி லதா ரஜினிகாந்திடமும் ஆசிபெற்றார். அந்த புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.


News

ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளனர்: ட்ரம்ப்

Published

on

சிரியா -துருக்கி எல்லையில் உள்ள குர்து படையினர் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Continue Reading

News

சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு : விவரங்கள் குறித்து விசாரணை

Published

on

ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் தங்கமணி (70) என்பவர் உடல் நலக்குறைவால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் மட்டும் தெரிய வந்துள்ள நிலையில், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற மற்ற விவரங்கள் தெரியவில்லை. அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

News

பாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்

Published

on




பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளான மால்கண்ட், மர்டன் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 


Continue Reading

Updates

Trending