B4blaze Tamil
News

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

நாகப்பட்டினம்:

திருவாரூர் மாவட்டம் வேலங்குடி கீழப்படுகை மெயின் சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 25). ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் யாஸ்மின் (19). காதல் திருமணம் செய்த இவர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் பாஸ்கரன் கூறியிருப்பதாவது, நான் திருவாரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தொழில் சம்பந்தமாக ஈரோடு செல்லும் போது யாஸ்மினுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 12-ம் தேதி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். எங்களை குடும்பத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.

Related posts

அக்டோபர் 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரம் – தின செய்திகள்

webadmin

ரெயில்வே பகுதியில் மரம் வெட்டி விற்பனை செய்த 4 பேர் கைது

webadmin

நேற்றைய போட்டியின் நடுவே மீண்டும் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் பறந்த விமானம்

webadmin