News
பட்டாணி சுண்டல் செய்வது எப்படி? – தின செய்திகள்

தேவையான பொருட்கள்:
பட்டாணி – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 5
வத்தல் – 3
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிதளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்: பட்டாணியை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீரிலேயே சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். சுமார் 4 விசில் போதுமானது. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வத்தல் தாளிக்கவும். பிறகு வெங்காயம், மஞ்சள் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் பட்டாணி சேர்த்து பிரட்டவும். கடைசியில் கறிவேப்பிலை சேர்க்கவும்.
News
பச்சிளம் குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்த மர்ம நபர்
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடேரு வனப்பகுதியில் வசமாமிடி என்ற மலை கிராமத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் குழந்தை அழுகை சத்தம் வந்துள்ளது. அந்த வழியே சென்ற ஒருவர் சத்தம் வந்த இடத்தில் மண் மூடப்பட்டிருந்தது. அதிர்ந்துபோன அந்த நபர், விரைந்து சென்று பார்த்தபோது, பச்சிளம் குழந்தை ஒன்றை மர்ம நபர் ஒருவர் உயிரோடு குழி தோண்டி புதைக்க முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. ஊர் மக்கள் அதை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணையைத் தொடக்கியுள்ளனர். மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டபோது, குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது.
News
அந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.
News
உடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்

உப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.
உப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.
உடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.
-
Reviews7 months ago
NEEYA 2 திரைப்பட விமர்சனம்
-
News5 months ago
நடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்
-
News5 months ago
ஒட்டு துணிகூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடிகை அமலா பால் ; ஆடை படத்தின் புகைப்படங்கள் வெளியீடு
-
Film News7 months ago
வித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்
-
News5 months ago
எவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ
-
Film News7 months ago
சாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்!
-
News5 months ago
பப்ஜி லைட் பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்வது எப்படி?
-
Film News7 months ago
நான் மிகவும் பயந்தேன்: ‘ரவுடி பேபி’ பாடல் பற்றி சாய் பல்லவி