Connect with us

News

பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மன்மோகன் சிங் – இன்று வேட்பு மனு தாக்கல்

Published

on




புதுடெல்லி:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்தாண்டு காலம் நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜெய்ப்பூர் நகரில் ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகரிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கேலாட், துணை முதல் மந்திரி சச்சின் பைலட் ஆகியோரும் அவருடன் வந்திருந்தனர். ஆறாவது முறையாக தற்போது ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்படும் இவரது பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும்.


News

நெல்லை மாவட்டத்தை பிரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு

Published

on

நெல்லை,

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நெல்லை ஆட்சியர்  அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்தியகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காலை 10 மணி முதல் 11 மணி வரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான மக்கள் நெல்லை மாவட்டத்தை பிரிப்பதை வரவேற்கவில்லை. அம்பை, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களை தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Continue Reading

News

தின செய்திகள்: தங்கத்தின் இறக்குமதி வரியை குறைப்பது சாத்தியமற்றது: நிர்மலா சீதாராமன்

Published

on




அமதாபாத்,

தொடர்ந்து உயர்நிலையில் உள்ள ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ.29 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தங்கத்துக்கான இறக்குமதி விலையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ள நிலையில், இறக்குமதி வரியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த, நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுமா? என கேள்வி கேட்க்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இறக்குமதி வரியை குறைக்க முடியாது என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நகை செய்தல் உள்ளிட்ட மதிப்பு கூட்டு நடவடிக்கைகளுக்காக தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை போல தங்கமும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. நாம் வாங்கும் ஒவ்வொரு தங்கமும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக செலவிடப்படும் அன்னிய செலவாணியின் அளவை நாம் பார்க்க வேண்டும். நான் அதை தள்ளு படி செய்ய முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.


Continue Reading

News

காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பாகிஸ்தான் செய்த செயல்

Published

on

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 ரோடுகள் மற்றும் 5 பெரிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஷ்தார் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Updates

Trending