Connect with us

News

பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

Published

on
புது டெல்லி:

பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் மேன் vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ்.

இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்தார். இந்த நிகழ்ச்சி நேற்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இதில், பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் பின்வருமாறு:

பயமா? எனக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் பயத்தை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து விளக்க இயலவில்லை. ஆனால், நான் நேர்மறையான சிந்தனை கொண்டவன். என் கனவுகள் எல்லாம் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதில்தான் இருக்கிறது. தேசத்தின் வளர்ச்சியில்தான் என் முழுகவனம்.

இன்று இளைஞர்களுக்கு நான் ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டுமென்றால், நாம் நமது வாழ்வை பிரித்துப் பார்க்கக் கூடாது. வாழ்க்கையை முழுமையாகப் பாருங்கள். எப்போதாவது கீழே இறங்கினால் அதை நினைத்து வருந்தாதீர்கள். அங்கிருந்துதான் உங்கள் பயணம் தொடங்குகிறது.


News

அந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே

Published

on
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது.  இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.

 


Continue Reading

News

உடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்

Published

on
உப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.
உப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.
உடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.


Continue Reading

News

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு

Published

on

புதுடெல்லி:

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Continue Reading

Updates

Trending