September 18, 2020
B4blaze Tamil
News

பிரேசிலில் போலீசாரின் வேலை நிறுத்த போராட்டத்தால் குற்றங்கள் அதிகரித்ததோடு, கடந்த 5 நாட்களில் மட்டும் 147 கொலைகள்

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீரா மாகாணத்தை சேர்ந்த போலீசார் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 19-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நாட்டு சட்டத்தின்படி போலீசார் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும்அண்மையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த மாகாண கோர்ட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போலீசார் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது.  போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனாலும் போலீசார் போராட்டத்தை கைவிட மறுத்து, வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர். போலீசாரின் வேலை நிறுத்த போராட்டத்தால் சீரா மாகாணத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிக அளவில் கொலைகள் நடக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் 147 கொலைகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக சீரா மாகாணம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்கள் துப்பாக்கிகளை கையில் ஏந்தி வீதிகளில் ரோந்து வருகின்றனர்.

Related posts

விபத்தில் படுகாயம் அடைந்த இயக்குனர் சுசீந்திரன்

webadmin

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு நிர்பயாவின் தாயார் வரவேற்பு

webadmin

ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் – தின செய்திகள்

webadmin

கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்தது

webadmin

ஸ்பெயினில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐத் தாண்டியது

webadmin

ராஜ்கோட் ஆடுகளம் எப்படி? – தின செய்திகள்

webadmin

திமிரு படத்தில் வில்லியாக மிரட்டிய ஸ்ரேயா ரெட்டிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா ?

webadmin

தேள் கடிக்கு இயற்கை தீர்வு

webadmin

இந்தியா அமைதியை மட்டுமே விரும்புகிறது : நிதின் கட்கரி ஆவேசம்

webadmin

தந்தையை ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொன்ற வளர்ப்பு மகள்

webadmin

பான் லட்டு செய்வது எப்படி? – தின செய்திகள்

webadmin

காலிஃப்ளவர் மசாலா

webadmin