Connect with us

News

புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

Published

on

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை நோக்கியா மொபைல் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி., 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பியாவில் இதன் விலை 109 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 8,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News

காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை : பெற்றோர்கள் எதிர்த்ததால் பரிதாபம்

Published

on

ஆரணி

ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த குந்தவாழுரை சேர்ந்தவர் தேவராஜ் (22), கார் டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (19) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெங்களூரில் தங்கியிருந்து தேவராஜ் கார் ஓட்டி வந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கருங்காலி குப்பம் சமத்துவபுரத்தில் வசித்து வரும் தேவராஜின் சித்தி சந்திரா வீட்டிற்கு இருவரும் வந்தனர்.

காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த காதல் தம்பதியினர் நேற்று இரவு சந்திராவின் வீட்டு முன்பு புங்கமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தேவராஜிம், காயத்ரியும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு சந்திரா அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து களம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

News

நடிகை தீப்தி சதியின் டூ பீஸ் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published

on

தென்னிந்திய திரையுலகில் மலையாள சினிமாவில், நீனா ,புள்ளிக்காரன் ஸ்தாரா ,சோலோ , லவ குசா ,டிரைவிங் லைசென்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை தீப்தி சதி . இவருக்கு சில திரைப்பட விருதுகள் கிடைத்திருக்கின்றன . இவரது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது .

Continue Reading

News

பெண் உயிரோடு எரித்து கொலை: பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

Published

on

பிஜோனூர்

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். யாரோ மர்ம மனிதர்கள் அந்த பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்களும் கிடந்தன. இதனால் அவரை சுட்டுக்கொன்று எரித்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்றும் தெரியவில்லை.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Continue Reading

Updates

Trending