Connect with us

News

மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்வது எப்படி?

Published

on




தேவையான பொருட்கள் :
நெஞ்செலும்பு – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
சீரகம், மிளகு – சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
உப்பு – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
மஞ்சள்பொடி – சிறிது

தாளிக்க :
இஞ்சி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை.

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும். இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்செலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெடி.


News

நடிகை தீப்தி சதியின் டூ பீஸ் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published

on

தென்னிந்திய திரையுலகில் மலையாள சினிமாவில், நீனா ,புள்ளிக்காரன் ஸ்தாரா ,சோலோ , லவ குசா ,டிரைவிங் லைசென்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை தீப்தி சதி . இவருக்கு சில திரைப்பட விருதுகள் கிடைத்திருக்கின்றன . இவரது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது .

Continue Reading

News

பெண் உயிரோடு எரித்து கொலை: பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

Published

on

பிஜோனூர்

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். யாரோ மர்ம மனிதர்கள் அந்த பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்களும் கிடந்தன. இதனால் அவரை சுட்டுக்கொன்று எரித்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்றும் தெரியவில்லை.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Continue Reading

News

சீரியல் நடிகை கவிதா வெளியிட்ட புதிய புகைப்படங்கள்

Published

on




சின்னத்திரை உலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் கவிதா . இவர் உதவும் கரங்கள், அசுரன்(1995), போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது புதிய புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.


Continue Reading

Updates

Trending