Connect with us

News

மன்ஸா முஸா பற்றி தெரியுமா?

Published

on

உலகில் உள்ள பணக்காரர்களில், மன்ஸா முஸா மிக முக்கியமான இடத்தில் உள்ளார். 1280-1337 வரை இவர் மாலி என்ற நாட்டில் வசித்து வந்தார். இப்போது அந்த நாடு, மேற்கு ஆப்ரிக்காவில் உள்ளது. இவரை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், டிம்புக்டாவின் அரசன் என்று அழைக்கிறார்கள். உலகில் அதிக அளவில் சொத்துக்களை தங்கமாக வைத்து இருந்த ஒரே நபர் இவர்தான். இவர் போர் படையில் 20 லட்சம் பேர் இருந்துள்ளனர். அதேபோல், இவரிடம் 4 லட்சம் வில் அம்புகள் இருந்துள்ளது. ஆனாலும் இவரின் சொத்து மதிப்பை துல்லியமாக கணக்கிட முடியவில்லை.

News

எம்எஸ் டோனி ஐபிஎல் 2021 சீசனிலும் சென்னைக்காக விளையாடுவார் – என் ஸ்ரீனிவாசன்

Published

on
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் பிசிசிஐ-யின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

2020 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடக்கும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை தக்கவைத்துக் கொண்டது. 2020 ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், 2021 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து என் ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி எப்போது ஓய்வு பெறுவார், இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்? என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் விளையாடுவார். அதற்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த வருடம் விளைாடுவார். அடுத்த வருடம் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் பங்கேற்பார். ஏலத்தின்போது அவரை தக்கவைப்போம். அதனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எவருக்கும் வேண்டாம்’’ என்றார்.


Continue Reading

News

குடியுரிமை என்பது யாருடைய உரிமையையும் பறிப்பதல்ல – நிர்மலா சீதாராமன்

Published

on
சென்னை:

சென்னை தியாகராய நகரில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

நமது நாட்டில் குடியுரிமை சட்டம் என்பது 1995 முதல் இருக்கிறது. குடியுரிமை என்பது யாருடைய உரிமையையும் பறிப்பதல்ல. உரிமையை கொடுப்பதுதான். இலங்கை உள்பட பல நாடுகளில் இருந்து வந்து முகாம்களில் அடைந்து கிடப்பவர்களை பார்த்தால் வேதனையாக உள்ளது. யாருடைய குடியுரிமை பறிபோகும் என்று கூறுகிறார்களோ அவர்களிடம் உண்மையை விளக்க தயாராக இருக்கிறோம். குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் சொல்வது சட்டத்துக்கு புறம்பானது.


Continue Reading

News

நான்கு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சிறுவன் கைது

Published

on

அமெரிக்கா: பிள்ளைகள் மூன்று பேரரையும்   ஒரு பெண்ணையும்  துப்பாக்கியால் சுட்டுக், கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். சம்பவம் உத்தா மாநிலத்தின் கிரேன்ஸ்வில் நகரில், நேற்று முன்தினம் நடந்ததாக பிரபல  செய்தி நிறுவனம் கூறியது. சம்பவத்தின் தொடர்பில் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அங்கு 3 பிள்ளைகளும் ஒரு மாதுவும் இறந்து காணப்பட்டனர்.

மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாக நம்பப்படும் சிறுவன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சிறுவன் பின்னர், மருத்துவமனையில் கைதுசெய்யப்பட்டான். அவன் 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறான். சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் உறவினர்களாக இருக்கலாம் என்று விசாரணையாளர்கள் நம்புகின்றனர். 2007-லிருந்து, உத்தா மாநிலத்தின் நடத்தப்பட்ட ஆகப் பெரிய கொலைச் சம்பவம் இது என்று காவல்துறையினர் கூறினர்.

Continue Reading

Updates

Trending