Connect with us

News

மின்சாரம் தாக்கி பெண் பலி – தின செய்திகள்

Published

on




களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 73). இவரது மனைவி புஷ்பம் (62). இவர்களது மகன்கள், மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனால் மகாலிங்கமும், அவரது மனைவி புஷ்பமும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று புஷ்பம் வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரின் சுவீட்சை போட்டார். அப்போது எதிர் பாராதவிதமாக மின்சாரம் தாக்கி புஷ்பம் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மகாலிங்கம் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


News

மூக்கிரட்டை செடியின் முக்கிய பயன்கள் – தின செய்திகள்

Published

on




மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது.
மூக்கிரட்டை உடலில் இறங்கும்போது, அங்கே, வாத வியாதிகள் எல்லாம், அடங்கி, வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்யும்.

புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.


Continue Reading

News

உடலுக்கு குளிர்ச்சியை தரும் மருதம் பட்டை

Published

on




மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இந்த மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது.வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது.மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம்.மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.


Continue Reading

News

லிச்சி தரும் நன்மைகள் – தின செய்திகள்

Published

on




லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு. லிச்சிப் பழம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும். எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.


Continue Reading

Trending