Connect with us

News

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரெயில் என்ஜின் தயாரிப்பு

Published

on
புது டெல்லி :

“மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இதற்கு முன்பு இருந்த ரெயில்களை விட அதிவேக ரெயில் என்ஜின் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது” என மத்திய ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், “வாப் – 7 எச்எஸ் 30750 ஜீஇசட்பி (WAP-7HS 30750 GZB) வகை புதிய ரெயில் என்ஜின் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று ராஜஸ்தானின் ரவதா சாலை – லாபான் பாதையில் இந்த என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிமீ வரை வேகத்தில் சென்றது. 24 பெட்டிகளுடன் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. தற்போதைய அதிவேக என்ஜினான வாப்-7 என்ஜினை விட (மணிக்கு 140 கிமீ வேகம்) இந்த புதிய என்ஜின் அதிக செயல் திறன் கொண்டது ” என்றனர்.


News

உடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்

Published

on
உப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.
உப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.
உடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.


Continue Reading

News

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு

Published

on

புதுடெல்லி:

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Continue Reading

News

முதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published

on

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்பிகா. சமீப காலமாக கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று காலையும் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

அப்போது அம்பிகா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்த நேரத்தில் சங்கர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அம்பிகா கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Continue Reading

Updates

Trending