Connect with us

News

ரைஸ் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?

Published

on

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி – 1 கைப்பிடி,
கலந்த காய்கறிகள் – 1/4 கப்,
இஞ்சிபூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – 1,
நறுக்கிய தக்காளி – 1,
கரம்மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லித்தழை – சிறிது,
மிளகு தூள் – அரை தேக்கரண்டி,
தேங்காய்ப்பால் – 1/2 கப்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

காய்கறி, தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியைசின்னதாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

அதில் கரம்மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் ஊறவைத்த அரிசியை போட்டு 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.

ஆறியதும் தேங்காய்ப்பால், மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

சத்தான ரைஸ் வெஜிடபிள் சூப் ரெடி.

News

ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளனர்: ட்ரம்ப்

Published

on

சிரியா -துருக்கி எல்லையில் உள்ள குர்து படையினர் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Continue Reading

News

சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு : விவரங்கள் குறித்து விசாரணை

Published

on

ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் தங்கமணி (70) என்பவர் உடல் நலக்குறைவால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் மட்டும் தெரிய வந்துள்ள நிலையில், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற மற்ற விவரங்கள் தெரியவில்லை. அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

News

பாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்

Published

on




பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளான மால்கண்ட், மர்டன் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 


Continue Reading

Updates

Trending