B4blaze Tamil
News

வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்

தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லி இலை – 15,
ஓமம் – 2 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
மிளகு – 4 எண்ணிக்கை,
சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 4 பல்,
சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
வெற்றிலை – 4,
நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை

கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து வைக்கவும்.

கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் நெய் விட்டு ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அதில் கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கொதித்து சுண்டியதும் வடித்து பரிமாறவும்.

சத்தான ஓமம் கற்பூரவல்லி இலை சூப் ரெடி.

Related posts

விஜய்யின் வெறித்தனம் பாடலுக்கு மாஸ் நடனம் போட்ட அலுவலக பணியாளர்கள

webadmin

புதிய முயற்சியில் களம் இறங்கிய பேட்ட பட இயக்குனர்- வெளியான தகவல்

webadmin

தின செய்திகள்: அடுத்தடுத்து இரண்டு கோவில்களில் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை

webadmin