Connect with us

News

வாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்

Published

on

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய திருமணமான இளம்பெண் ஒருவர், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நெகிழி குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ் (வயது 25) என்ற இளைஞரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், தினேசை மிரட்டி, அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அவருடன் வந்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். தினேசை அடிக்காதீர்கள், விட்டு விடுங்கள் என அவர்களிடம் கெஞ்சினார்.

ஆனால் மீண்டும் தினேசை அடித்து உதைத்து விட்டு அவர்கள், இளம்பெண்ணை வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் பதறிப்போன தினேஷ், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூறி பொதுமக்களை அழைத்து வந்து கூச்சலிட்டதால், இளம்பெண்னை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு, அங்கிருந்து 6 பேரும் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீர் மல்க ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது பற்றி உயர் அதிகாரிகளான போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் வாழப்பாடி டி.எஸ்.பி. சூரிய மூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நெய்யமலை பகுதி மக்கள் கூறிய தகவல்களை வைத்தும், பாதிக்கப்பட்ட பெண் கூறிய அங்க, அடையாளங்களை வைத்தும், அந்த பகுதியில் பதுங்கியிருந்த 4 பேரை செய்தனர். இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News

பகிர்வு சைக்கிள் அறிமுகம் செய்யும் Moov Technology நிறுவனம்

Published

on

Moov Technology நிறுவனம் 10,000 பகிர்வு சைக்கிளை அதன்கீழ் வைத்துக்கொள்ள நிலப்போக்குவரவு ஆணையம் முழு உரிமம் வழங்கியுள்ளது. முன்பு 1,000 பகிர்வு சைக்கிள்கள் மட்டுமே நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வந்தன. அடுத்த ஈராண்டுக்குப் பொது இடங்களில் Moov பகிர்வு சைக்கிள்களை மக்கள் பயன்படுத்தலாம். ஆண்டிறுதிக்குள் அனைத்து சைக்கிள்களையும், மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூரில் தற்போது 3 பகிர்வு சைக்கிள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதில் SG Bike நிறுவனம் ஆக அதிகமாக 25,000 பகிர்வு சைக்கிள்களைக் கொண்டுள்ளது. முறையான சைக்கிள் நிறுத்துமிடங்களில், பகிர்வு சைக்கிள்கள் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய, QR குறியீட்டை நிறுவனங்கள் கொண்டிருக்கவேண்டும். பகிர்வு சைக்கிள்களைப் பயன்படுத்துவோரின் தேவைக்கேற்ப, எண்ணிக்கையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

Continue Reading

News

ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளனர்: ட்ரம்ப்

Published

on

சிரியா -துருக்கி எல்லையில் உள்ள குர்து படையினர் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Continue Reading

News

சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு : விவரங்கள் குறித்து விசாரணை

Published

on

ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் தங்கமணி (70) என்பவர் உடல் நலக்குறைவால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் மட்டும் தெரிய வந்துள்ள நிலையில், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற மற்ற விவரங்கள் தெரியவில்லை. அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

Updates

Trending