August 4, 2020
B4blaze Tamil
News

வேலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை

வேலூர்:

வேலூர் கன்சால் பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரத். (வயது 36) ஆட்டோ டிரைவர். வேலூர் சாரதி மாளிகை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவராக இருந்தார். இவரது மனைவி செல்வி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். வேலூர் சேண்பாக்கம் பர்மா காலனி பெரிய நகரை சேர்ந்த மைக்கேல் (வயது 27). இவருக்கு மக்கான் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண்ணின் மகளுடன் பரத்துக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பரத் மைக்கேல் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் பரத் அங்கிருந்து சில அடி தூரம் நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற மைக்கேல் இரும்பு கம்பியால் பரத்தின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பரத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து மைக்கேலை கைது செய்தனர்.

Related posts

ப.சிதம்பரம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் – டெல்லி உயர்நிதிமன்றத்தில் கபில்சிபல்

webadmin

மத சுதந்திரங்களை மீறும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் பாகிஸ்தான், சீனா

webadmin

காமெடி நடிகருக்கு சிறுவயதில் நடந்த கொடுமைகள்

webadmin

எண்ணெய் குளியலின் அவசியம் – தின செய்திகள்

webadmin

ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம்

webadmin

இப்போதைய அரசியல் அமைப்பில் மாற்றம் தேவை – கூறும் முன்னாள் அதிபர்

webadmin

ஜெர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெதுவாகத் தளர்த்துவதற்கு திட்டம்

webadmin

தின செய்திகள்: பிளாக் செயின் ஹெல்த் டெக்னாலஜி

webadmin

பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மறுஅறிவித்தல் வரும்வரை மூடப்படுவதாக அறிவிப்பு

webadmin

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி கைவிடப்பட்டது

webadmin

ஒகேனக்கலில் 5வது நாளாக நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக நீடிப்பு !!

webadmin

பலரையும் ரசிக்க வைத்த குழந்தையின் நடவடிக்கை -இணையத்தில் பரவும் காட்சி

webadmin