Connect with us

News

4200 ஆண்டுகளுக்கு முன்பு.. நாம் நடந்து வந்த புதிய பாதை.. வெளியான தகவல்!

Published

on

மனித குல வரலாற்றில் புதிய காலம் (Age) ஒன்றை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது கற்காலம், இரும்புக்காலம் ஆகியவற்றின் வரிசையில் புதிய காலம் ஒன்றை விஞ்ஞானி்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த காலகட்டத்தின்போது மிகப் பெரிய வறட்சியை பூமி சந்தித்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த காலத்திற்கு இந்தியாவின் ஒரு மாநிலமான மேகலாயாவின் பெயரை சூட்டி மேகாலயன் காலம் (Meghalayan Age) என்று இதற்கு விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் மேகலாயவில் கிடைத்ததால் மேகலாயாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய காலத்தின் வயது இன்று முதல் பின்னோக்கி 4200 ஆண்டுகள் ஆகும். இந்த காலகட்டத்தின்போது பூமி மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த புதிய மேகாலயன் காலத்தின் தொடக்கத்தின்போதுதான் பல உலக நாகரீகங்கள் அழிந்தனவாம். அதாவது இந்த காலகட்டத்தில் பூமி முழுவதும் மிகப் பெரிய வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பல நாகரீகங்கள் அழிவைக் கண்டனவாம்.

தற்போது நாம் இருந்து வரும் காலகட்டத்தை (Holocene Epoch) ஹோலோசீன் சகாப்தம் என்று கூறுவோம். அதாவது கிட்டத்தட்ட தற்போது உள்ள அனைத்து உயிரின, பூகோள மாறுபாடுகளும் 11,700 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டவையாகும்.

தற்போது ஹோலோசீன் சகாப்தத்தையும் பிரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அதில் ஒன்றுதான் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேகாலயன் காலமாகும். இதற்கான அறிவிப்பை சர்வதேச புவித்தட்டியல் கழகம் அறிவித்துள்ளது. இதுதான் பூமியின் பல்வேறு மாறுபாடுகளை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய மேகாலயன் காலகட்டமானது 4200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 1950ம் ஆண்டு வரையிலான காலகட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் பல பயங்கர வறட்சிகள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் இந்த வறட்சி நீடித்துள்ளது.

இந்த காலகட்டத்தின்போதுதான் எகிப்து, கிரீஸ், சிரியா, பாலஸ்தீனம், மெசபடோமியா, சிந்து சமவெளி, யாங்ஸே ஆற்று பள்ளத்தாக்கு நாகரீகங்கள் அழிந்துள்ளன என்று பிபிசி செய்தி தெரிவிக்கிறது.

News

நான்கு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சிறுவன் கைது

Published

on

அமெரிக்கா: பிள்ளைகள் மூன்று பேரரையும்   ஒரு பெண்ணையும்  துப்பாக்கியால் சுட்டுக், கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். சம்பவம் உத்தா மாநிலத்தின் கிரேன்ஸ்வில் நகரில், நேற்று முன்தினம் நடந்ததாக பிரபல  செய்தி நிறுவனம் கூறியது. சம்பவத்தின் தொடர்பில் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அங்கு 3 பிள்ளைகளும் ஒரு மாதுவும் இறந்து காணப்பட்டனர்.

மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாக நம்பப்படும் சிறுவன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சிறுவன் பின்னர், மருத்துவமனையில் கைதுசெய்யப்பட்டான். அவன் 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறான். சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் உறவினர்களாக இருக்கலாம் என்று விசாரணையாளர்கள் நம்புகின்றனர். 2007-லிருந்து, உத்தா மாநிலத்தின் நடத்தப்பட்ட ஆகப் பெரிய கொலைச் சம்பவம் இது என்று காவல்துறையினர் கூறினர்.

Continue Reading

News

பிரபல நடிகைக்காக வேண்டி 5 நாட்களாக ரோட்டில் படுத்து கிடந்த ரசிகர்

Published

on
தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் தெலுங்கில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது இந்தி படங்களில் நடித்து வருபவருக்கு ரசிகர் ஒருவர் இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார் . பாஸ்கர் ராவ் என்பவர் பூஜாவை காண்பதற்காக ஐந்து நாட்களாக ரோட்டில் படுத்து உறங்கியுள்ளாராம். இந்த விஷயத்தை அறிந்த பூஜா அவரை சந்தித்த தருணத்தை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதிலும் தனக்காக ரசிகர்கள் இவ்வாறு சிரமப்படுவதை கண்டு மனம் வருந்துவதாகவும் கூறியுள்ளார் .Continue Reading

News

பிரான்சில் மக்ரோன் இருந்த திரையரங்கம் முன்பாக நடைபெற்ற போராட்டம்

Published

on
பிரான்சில் மக்ரோன் இருந்த திரையரங்கம் முன்பாக திடீரென போராட்டக்காரர்கள் குவிந்ததால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பாரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Théâtre des Bouffes du Nord திரையரங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கொண்டிருந்தார். இரவு 10 மணி அளவில், திடீரென திரையரங்கிற்கு முன்னால் ‘மக்ரோனுக்கு-எதிரான’ போராட்டக்காரர்கள் சிலர் குவிந்தனர். ஐம்பதற்கும் அதிகமான போராட்டக்காரர்கள் குவிந்ததை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரங்கிற்குள் நிகழ்ச்சியினை மக்ரோன் தனது மனைவி பிரிஜித் மக்ரோனுடன் கண்டு கொண்டிருந்தார். அதனையடுத்து CRS அதிகாரிகள் மிக விரைவாக குவிந்து, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.


Continue Reading

Trending